Lead News

என்னிடம் அதிகாரம் இருந்தால் ராஜபக்ச குடும்பம் இலங்கையில் இருக்காது!!

ராஜபக்சக்கள் என்பவர்கள் வெறும் “ஊதிப் பெருப்பிக்கப்பட்ட பிம்பங்கள்” மாத்திரமே என்றும், அவர்களை ஒடுக்குவது தனக்கு ஒரு சிறிய விடயம் என்றும் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,

“ராஜபக்சக்கள் வெறும் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட பிம்பங்கள். அவர்களை ஒடுக்குவது மிகவும் சாதாரணமான ஒரு விடயம். கபிலவின் மரணத்தினால் அதிக லாபம் மஹிந்தவுக்குத்தானே கிடைத்தது” எனக் குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து கருத்து தெரிவித்த பொன்சேகா, “எனக்கு அதிகாரம் கிடைத்தால், ராஜபக்சக்கள் இந்த நாட்டில் இருக்கவும் மாட்டார்கள்” என மிகக் கடுமையான அறிக்கை ஒன்றையும் விடுத்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading