Cinema

எனக்கு போட்டியா என்னை மட்டுமே நினைக்கிறேன் வடிவேலு பேட்டி!

‘எந்த சமூக வலைத்தளத்திலும் நான் இல்லை’ என்று வடிவேலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி: எல்லா பிரச்னைகளையும் தாண்டி மறுபடியும் சினிமாவுல நடிக்க வந்திருக்கேன். சுராஜ் டைரக்‌ஷன்ல நடிக்கிற நாய் சேகர் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். அவர் கூட சேர்ந்து ஒர்க் பண்றதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. சினிமாவுல இத்தனை வருஷமா இருந்தாலும், எதுவும் பெருசா சாதிச்சிட்டதா நினைக்கல. இன்னும் சாதிக்கிறதுக்கு நிறைய இருக்கு. இனிமே ராஜா வேஷமோ, எமதர்மன் வேஷமோ போட மாட்டேன். இப்ப எப்படி இருக்கேனோ அந்த மாதிரி கேரக்டர்லதான் நடிப்பேன். கலைத்தாய் மீது ஆணையா சொல்றேன், இனிமே ஹிஸ்டாரிக்கல் படத்துல நடிக்க மாட்டேன்.

ஜனங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும் என்பதே என் ஆசை. மத்தவங்களை சிரிக்க வைக்கிற இந்த வேலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.  குழந்தைங்க வரைக்கும் என்னை நல்லா தெரிஞ்சு வெச்சுக்கிட்டு, என்னை மாதிரியே பாவனை பண்றது கடவுள் எனக்கு கொடுத்த வரம். சினிமாவுல எனக்கு போட்டியா என்னை மட்டும்தான் நினைக்கிறேன். ஒரு கேரக்டர்ல நடிக்கிறப்ப, இதுக்கு முன்னால் பண்ண கேரக்டரை விட சிறப்பா நடிக்கணும்னுதான் நினைப்பேன்.
என்னை வெச்சு நிறைய மீம்ஸ் போடறாங்க. அதையெல்லாம் பார்ப்பேன். எந்த சமூக வலைத்தளத்திலும் நான் இல்லை. என் பேர்ல வெளியாகும் எல்லா சமூக வலைத்தள பகுதிகளும் போலி. நம்புங்க. ஆத்தாடி… அது நான் இல்லீங்க.
இவ்வாறு வடிவேலு கூறியுள்ளார்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading