Local

எனது தந்தை கிழட்டு மைனாவா நாமல் ராஜபக்ச ஆவேசம்!

எமது நாட்டின் கலாசார சீரழிவின் கேந்திர நிலையமாகவே ‘அறகலய’ (போராட்டம்) களம் செயற்பட்டதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மஹிந்த ராஜபக்ச என்ற நாமத்தை சிதைப்பதற்கு முற்பட்டனர். அதனால்தான் அவர் விகாரைக்கு செல்வதைக்கூட நகைச்சுவை விடயமாக மாற்றியமைத்ததாகவும் நாமல் கூறினார்.
அதோடு எனது தந்தையை (மஹிந்த ராஜபக்ச) கிழட்டு மைனா என விமர்சிப்பவர்கள், அவர்களின் பெற்றோரையும் கிழட்டு மைனா எனக் கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை என நான் கூறியிருந்தேன் என குறிப்பிட்ட நாமல் ராஜபக்க்ஷ, அப்படியான சம்பவங்கள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

இதனால்தான் அவ்வாறானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தேன் என்றும், போராட்டக்களத்தில் இலங்கை சிங்கள, பௌத்த நாடு அல்ல என்றார்கள். அநீதிகளைக்கூட நியாயப்படுத்தும் வகையிலான செயற்படுகள் அங்கு இடம்பெற்றதாவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading