Cinema

எய்ட்ஸால் தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிரபல நடிகை!

கிடைக்கற சான்ஸ் கப்பு சிப்புனு கெட்டியா புடிச்சிக்கணும்.. இந்த விஷயம் எந்து துறைக்கு பொருந்துதோ இல்லையோ கண்டிப்பா சினிமா துறைக்கு பொருந்தும்.

சினிமாவில் கொடிக்கட்டி பறக்கணும்னா கிடைக்கற வாய்ப்ப கண்டிப்பா Use பண்ணிக்கணும். அப்படி 80களின் பிற்பாதியில் கொடிக்கட்டிப் பறந்தவர் நடிகை ரூபிணி.

ஒரே வருடத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. கூலிக்காரன் திரைப்படத்தில் அறிமுகமானாலும், மனிதன் படம் தான் இவருக்கு பேரு வாங்கி கொடுத்துச்சு. கிளாமருலயும் சும்மா பட்டைய கிளப்புவாரு.

இந்தில அறிமுகமானாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரிச்சயமான ரூபிணி குறுகிய காலத்துலயே கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார்னு அப்ப பாப்புலரா இருந்த கதாநாயகன்களோடு ஜோடி போட்டாரு.

இவருக்கு நல்ல நடிப்பு வருதோ இல்லையோ ஆனா நல்லா கிளாமர காட்டுவாரு.. அதனாலயே வாய்ப்பு நிறையகே கிடைச்சுது. மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்குனு ரொம்பவே பிசியா இருந்தாரு.

யாரு கண்ணுப்பட்டுச்சோ தெரியல.. சர்ர்னு உயர்ந்தவரு, டர்ர்னு கீழே இறங்கிட்டாரு. அதுக்கெல்லாம் காரணம் ஒரே ஒரு வதந்திதாங்க. சொந்த ஊரு மேலே அதிக பாசம் கொண்ட ரூபிணி அடிக்கடி மும்பைக்கு ஓடிருவாரு.

அப்படித்தான் மும்பை போன ரூபிணி, 3 மாசமா திரும்பி வரவே இல்ல. இதனால பல படங்கள் பாதிக்கப்பட்டுச்சு. உடனே அந்தம்மா தமிழ்நாட்டுக்கு வரமாட்டாங்க.. அவங்களுக்கு எய்ட்ஸ் வந்திருச்சுனு வதந்தியை பரப்பி சினிமா விட்டே ஒதுக்கிட்டாங்க.

இதையெல்லாம் கேள்விப்பட்ட ரூபிணி யாரோ என்னமோ சொல்லிட்டு போறாங்கனு மும்பையில் இல்வாழ்க்கைல ஈடுபட்டாங்க. 1995ல மோகன் குமார் ரயானா என்பவரை திருமணம் செய்த ரூபிணி 2003ல விவகாரத்து வாங்கிட்டாங்க. இவங்களுக்கு அனிஷானு ஒரு பெண் குழந்தை இருக்கு.

மறுபடியும் வாய்ப்பு கிடைக்குமானு சினிமா பக்கம் திரும்பிய அவருக்கு நோ சான்ஸ் தா கிடைச்சுது. இதனால தன்னோட ஆருயிர் தோழியான ராதிகாவிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்காரு. இதையடுத்து சித்தி 2 சீரியல்ல நடிக்க வச்சாங்க ராதிகா.

ஆனா கொரோனா வந்ததுனால சீரியல் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு, அவங்களும் நடிக்காம போக, வேற கதாபாத்திரத்தை வச்சு பார்த்தாங்க, இப்ப அந்த நாடகத்துல வெறும் 10 கேரக்டர்கள வெச்சுதா நகர்த்திட்டு வராங்க. இப்படி ரூபிணி தன்னோட சினிமா கேரியர எய்ட்ஸ்ங்கற வதந்தியால இழந்துட்டாங்கனு பிரபல குணச்சித்திர நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சொல்லிருக்காரு.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading