Local

மருத்துவமனையில் 15 மருத்துவர்களுக்கு கொரோனா!

பதுளை பொது மருத்துவமனையின் 15 மருத்துவர்கள் உள்ளிட்ட 55 மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண இணைப்பாளரும் பதுளை பொது மருத்துவமனையின் சிரேஷ்ட மருத்துவ அதிகாரியுமான மருத்துவர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.

பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 09 மருத்துவர்களில் 06 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரு தாதிகள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் கனிஷ்ட ஊழியர் ஒருவரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading