Local

எரிபொருள் இல்லாததால் திடீர் மின்தடை ஏற்படும் வாய்ப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது மின்விநியோகத்தை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளமையினால் இவ்வாறு மின்விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தற்போதைய நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதனால், களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடான மின்விநியோகம் வழமைக்கு வரும் வரையில், மின்விநியோக தடை ஏற்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, முன்னதாக அறிவிக்கப்பட்ட மின்விநியோக தடைக்கான கால அட்டவனை தற்போதைய நிலையில், நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனவும், நிலைமை வழமைக்கு வரும் வரையில் திடீர் மின்விநியோக தடை ஏற்படுமெனவும் இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading