எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானம்!

தனியார் மற்றும் அரச துறைகளில் இனங்காணப்பட்டுள்ள சில விசேட பிரிவினருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தியில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயண எரிபொருள் அனுமதி மற்றும் வாகனம் அல்லாத வகைகளுக்கு அடுத்த வாரம் முதல் QR முறை அறிமுகப்படுத்தப்படும்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட மீளாய்வுக்கு பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
