Local

எரிபொருள் தட்டுப்பாடு மக்கள் வங்கி வங்கரோத்து நிலையில்!

எரிபொருள்களிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது- மக்கள் வங்கி வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தொழிற்சங்க தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்தசிலநாட்களில் நாட்டில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவித்துள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க பந்துலசமன் குமார பெட்ரோல் டீசலிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சப்புஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதும் டொலர் தட்டுப்பாடுமே இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் சந்தித்துள்ள இழப்பை சமாளிப்பதற்காக டீசலை 43 ரூபாயினாலும் பெட்ரோலை 18 ரூபாயினாலும்  அதிகரிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய கடன்கள் காரணமாக மக்கள் வங்கி  விரைவில் வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading