Local

எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள ஊரடங்கு அமுல்படுத்தப்படுமா?

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற் கொண்டு ஊரடங்கை அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் சில அமைச்சர்கள் கேள்வியெழுப்பியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சர்களின் கேள்விக்கு குறித்த இருவரும் எதிர்மறையான பதில்களையே வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் வாரம் எரிபொருள் கப்பல்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading