World

எரிபொருள் தீர்ந்ததால் விழுந்து நொருங்கிய விமானம்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடுவானில் பறந்த சிறிய ரக விமானமொன்று எரிபொருள் தீர்ந்து வீட்டின் மேற்கூரையின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

ஆர்லாண்டோ நகர் பகுதியில் பறந்து கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் எரிபொருள் தீர்ந்து விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. விமானி, அந்த விமானத்தை அவசரமாக வீதியில் தரையிறக்க முயற்சித்துள்ளார்.

அதற்குள்ளாக அந்த விமானம் அங்கிருந்த ஒரு வீட்டின் மீது மோதி கீழே விழுந்து நொருங்கியது.

இந்த விபத்தில் விமானி சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading