Local

எரிபொருள் நெருக்கடியால் உயிரிழந்த இளம் வைத்தியர்!

பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் இளம் வைத்தியர் ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த தீபால் அமரசூரிய என்ற 30 வயதுடைய வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரேதப் பரிசோதனையில் அவர் நிமோனியாவால் ஏற்பட்ட பக்டீரியா தொற்று காரணமாக உய்ரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் நேற்றையதினம் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் மேலதிக மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொகுகேவினால் மேற்கொள்ளப்பட்டது.

பிரேதப் பரிசோதனையின் போது, ​​அவர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வந்ததும், சில வாரங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

பல நாட்களாக பெற்றோல் வரிசையில் காத்திருந்த வைத்தியர் தனது காரில் இருந்து மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோலை ரியூப் மூலம் எடுத்துச் சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டு நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு எக்மோ சிகிச்சைக்காக கடந்த 11ஆம் திகதி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், இளம் மருத்துவரின் மரணம் இலங்கை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading