Local

எரிபொருள் வாங்க வந்தவர் கத்தியால் குத்திக் கொலை!

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (20) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எரிபொருள் வாங்குவதற்காக வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கும் முச்சக்கர வண்டி சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே இந்த கொலைச் சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கானவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொழும்பு 14 இல் வசிக்கும் 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலை செய்த நபரை கைது செய்ய நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading