World

எலிசபெத் மகாராணி காலமானார்!

பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் பால்மோரலில் காலமானார்.

வியாழனன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரது ஸ்காட்டிஷ் தோட்டத்தில் கூடினர்.

ராணியின் மரணத்துடன், அவரது மூத்த மகன் சார்லஸ், முன்னாள் வேல்ஸ் இளவரசர், புதிய அரசராகவும், 14 காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராகவும் நாட்டை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மகா ராணி  காலமானார் | The Queen Has Died

இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று பிற்பகல் பால்மோரலில் ராணி நிம்மதியாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் ராணியை மருத்துவக் கண்காணிப்பில் வைத்த பிறகு, ராணியின் குழந்தைகள் அனைவரும் அபெர்டீனுக்கு அருகிலுள்ள பால்மோரலுக்குப் பயணம் செய்தனர்.

ராணியின் பேரன், இளவரசர் வில்லியம், அவரது சகோதரர் இளவரசர் ஹரியுடன் அங்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணியின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading