ஏழாவது திருமணம் செய்ய தயாராகும் பிரபல நடிகை!

ஏழாவது முறையாக திருமணம் செய்து கொள்வேன் என தான் நம்புவதாக பமீலா ஆண்டர்சன் கூறியுள்ளார்.
பமீலா ஆண்டர்சன்
கனடாவில் பிறந்தவர் பமீலா ஆண்டர்சன் (55). உலக புகழ்பெற்ற கனேடிய – அமெரிக்க நடிகையாக இருக்கும் அவரின் சொத்து மதிப்பு $20 மில்லியன் ஆகும். பமிலாவுக்கு இதுவரையில் 6 முறை திருமணமாகியுள்ளது.
கடந்த 1995ல் டாமி லீ என்பவரை முதல் திருமணம் செய்த பமீலா 1998ல் அவரை விவாகரத்து செய்தார். கடைசியாக கடந்த 2020ல் டேன் ஹேய்ஹஸ்ட் என்பவரை மணந்த பமிலா கடந்தாண்டு அவரை பிரிந்தார்.
பமிலாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர் மீண்டும் திருமணம் செய்வாரா என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.
சமீபத்தில் பமீலா பேட்டியளித்த போது மீண்டும் திருமணம் செய்வீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு, எனக்குத் தெரியாது, ஆனால் நான் நம்புகிறேன். எனக்கு இன்னும் நிறைய வாழ்க்கை வாழ இருக்கிறது என கூறியுள்ளார்.
இந்த பதிலின் மூலம் விரைவில் அடுத்த திருமணத்திற்கு பமீலா தயார் ஆவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
