Cinema

ஏழு கதாநாயகிகள் நடிக்கும் “ரெயின்போ”

வசந்த் ராமசாமி, இயக்குநர் எஸ். பி. ஹோசிமின் இணைந்து தயாரிக்கும் “ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் ஆரம்பமானது.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஹோசிமின். பரத் நடித்த பெப்ரவரி 14, சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் ஆயிரம் விளக்கு திரைப்படங்களை இயக்கியவர்.

இவரின் இயக்கத்தில் ஜப்பான் சுமோ Yoshinori Tashiro, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு நடிப்பில் இந்தியா மற்றும் ஜப்பானில் எடுக்கப்பட்ட எதிர்பார்ப்புக்குரிய படம் “சுமோ” விரைவில் வெளியாகவுள்ளது.

ரெயின்போ படத்தில் “BIG BOSS” புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன் நடிக்கிறார். படத்தில் வானவில் பிரதான கதாபாத்திரமாக வருகிறது.

ஏழு கதாநாயகிகளாக சிம்ரன்ராஜ் மற்றும் ஆறு முன்னனி கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மைம் கோபி, மனோபாலா, சார்லஸ் வினோத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இடம்பெறுகிறார்கள்.

பிரமாண்ட பொருட்செலவில் பரபரப்பான திரைக்கதையில் பேன்டசி காமெடி படமாக உருவாகி வருகிறது.

படத்தின் பூஜையில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், இயக்குனர் மாதேஷ் , ஜப்பான் தொழிலதிபர் குறிஞ்சி செல்வன், நடிகர் பிக்பாஸ் புகழ் அபினய், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

சுமோ படத்தின் இயக்குநர் ஹோசிமினிடம் உதவி இயக்குநராக இருந்த விவேக் கைபா பட்டாபிராம் படத்தை இயக்குகிறார்.

ஒளிப்பதிவாளர் வினோத்குமார், இசையமைப்பாளர் சுபாஷ் ஆனந்த், மக்கள் தொடர்பாளர் நிகில்முருகன் ஆகியோர் கூட்டணியில் படப்பிடிப்பு இனிதே தொடங்கியது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading