World

ஏழு மதுபான போத்தல்களை அருந்திய இளைஞர் உயிரிழப்பு!

சீனாவில் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 7 பாட்டில் மதுவை குடித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞர்

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த சமூக வலைதள பயனரான வாங் என்ற இளைஞர் பைஜியு என்ற சீனாவின் வோட்கா மது வகையை அதிகமாக குடித்துள்ளார்.

மேலும் தான் மது குடிப்பதை சீனாவின் டிக்-டாக் வெர்ஷன் டூயிங் என்ற சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

கிட்டத்தட்ட 7 பாட்டில்கள் மதுவை குடித்த அந்த இளைஞர் அடுத்த 12 மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

முதல் முறை அல்ல

சீன இளைஞர் வாங் இது போன்று தான் மது குடிப்பதை சமூக வலைதளத்தில் பதிவேற்றுவது இது முதல் முறை அல்ல.

இது போன்ற நடவடிக்கைகளில் அவர் பலமுறை ஈடுபட்டதை தொடர்ந்து அவரது சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் வேறொரு புதிய கணக்கை தொடங்கி வாங் தான் மது குடிக்கும் வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

லைக்குகளை பெறுவதற்காக இளைஞர் செய்த செயல் விபரிதமாக முடிந்துள்ள நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading