World

ஏழே நாட்களில் 7 உலக அதிசயங்களை பார்வையிட்டு கின்னஸ் சாதனை படைத்த நபர!

உலகில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏழு விசித்திரமான இடங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு எகிப்தியர் ஒருவர் ஏழு நாட்களில் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் 45 வயதான மக்டி ஈசா (Magdy Eissa). அவர் உலகின் ஏழு அதிசயங்களை ஏழே நாட்களுக்கும் பார்வையிட்டு உலக சாதனை படைத்துள்ளார்.

புதிய அவதாரம் எடுக்கும் டாடா Nano!
புதிய அவதாரம் எடுக்கும் டாடா Nano!
மக்டி ஈசா இந்த சாகசப் பயணத்தை 6 நாட்கள் 11 மணி நேரம் 52 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த கின்னஸ் உலக சாதனைப் பயணத்தின் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சீனப் பெருஞ்சுவருடன் தொடங்கிய இந்தப் பயணம், இந்தியாவின் தாஜ்மஹால், ஜோர்டானில் உள்ள பண்டைய நகரமான பெட்ரா, ரோமில் உள்ள கொலோசியம், பிரேசிலில் உள்ள கிறிஸ்ட் தி ரிடீமர், பெருவில் உள்ள மச்சு பிச்சு ஆகிய இடங்களைப் பார்வையிட்டார்.

அனைத்து இடங்களுக்கும் செல்ல பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

புதிய ஏழு அதிசயங்களைப் பார்வையிட்டு உலக சாதனையை முறியடிப்பதன் மூலம் தனது சிறுவயது கனவை நிறைவேற்றிகொண்டதாக ஈசா கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading