Local

ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் மொட்டுக்கு ஆதரவு வழங்கிவருகின்றனர்

அரசாங்கத்துடன் தொடர்புகளை கொண்டுள்ள பலர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் இவர்கள், அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர்.
தற்போதைய அரசாங்கம் மோசடியாளர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராது சட்டத்தை அமுல்படுத்தி வருகிறது.
கடந்த அரசாங்கம் ஊழல், மோசடியாளர்களை பாதுகாத்தது என்பது தற்போது நன்றாக தெளிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading