Local

ஐந்து இலட்சம் ரூபாவில் ஹஜ் செய்யலாம்

மத விவகாரங்களுக்கான அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டதன் பேரில் மக்கா நகரத்திற்கு புனித ஹஜ் யாத்திரை செய்வதற்காக தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும் தொகைகள் குறைந்த விலைக்கு மத்தியஸ்தம் செய்யப்படும் என்று இலங்கை ஹஜ் யாத்திரைக் குழு தெரிவித்துள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் புனித மக்கா நகரத்திற்கு முன்னதாக 8 லட்சம் வசூலிக்கப்பட்டது.

பிரதமரின் பணிப்புரைக்கமைவாக இனிமேல் 5 லட்சம் வசூலிக்கப்படவுள்ளது.

சவூதி அரேபியாவிற்கு இருவழி விமான டிக்கெட், விசா கட்டணங்கள், ஹோட்டல் கட்டணங்கள், மக்கா வளாகத்தில் கூடார வசதிகள், உணவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட ஒரு பக்கேஜுக்கு 5 லட்சம் அறவிடப்படுமென இலங்கை ஹஜ் குழு செய்தித் தொடர்பாளர் அப்துல் சத்தர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading