Local

ஐந்து கிலோ நெல்லை விற்று ஒரு கிலோ சீனியை வாங்கும் விவசாயிகள்!

ஐந்துகிலோ நெல்லைவிற்று விவசாயிகள் ஒருகிலோ சீனியை வாங்குகின்றனர் என அகில இலங்கை உழவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது ஐந்துகிலோ நெல்லை விற்று விவசாயிகள் ஒரு கிலோ சீனியை வாங்கவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளமை அரசாங்கம் பொருளாதாரத்தை மோசமாக கையாண்டுள்ளமைக்கான உதாரணம், என ஜேவிபி தலைமையிலான இலங்கை உழவர் கூட்டமைப்பின் தேசிய ஏற்பாட்டாளர் நாமல் கருணரட்ண தெரிவித்துள்ளார்.

ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற தவறிவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் இந்த நிலை ஒரு விபத்தல்ல மாறாக சுதந்திரத்திற்கு பின்னர் குறிப்பாக 1977க்கு பின்னர் அனைத்து அரசாங்கங்களின் கீழும் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார நிர்வாகத்தின் விளைவு இதுவென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொருளாதார கொள்கைகளின் நோக்கம் தெளிவானது – விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவதே இவற்றின் நோக்கம் என தெரிவித்துள்ள அவர் விவசாயிகளின் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் நிலையை பார்த்த பின்னர் விவசாயிகளாக வரவிரும்பாததன் காரணமாக அரசாங்கத்தின் நோக்கம்வெற்றிபெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்றின் பின்னர் விவசாயிகள் தங்கள் விளைச்சலை விற்பனை செய்ய முடியாததன் காரணமாக அவற்றை எறியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading