Local

ஐரோப்பிய நாட்டு எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை இளைஞன்!

ஐரோப்பிய நாடுகளான பெலாரஸ் – லிதுவேனியா எல்லைக்கு அருகில் இலங்கை இளைஞனின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையரின் சடலம் கடந்த 5ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லிதுவேனியா எல்லையில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் அவரது கையடக்க தொலைபேசி, வங்கி அட்டை மற்றும் ஆவணங்கள் ஆகியவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆவணங்களுக்கமைய குறித்த நபர் 29 வயதுடைய இலங்கை குடிமகன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது உள்ள தகவலுக்கமைய அவர் லிதுவேனியா பாதுகாப்பு பிரிவுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. அவர் பல முறை சட்டவிரோதமாக பெலாரஸ் நாட்டிற்குள் நுழைய முயற்சித்துள்ளார்.

இது தொடர்பிலான தீவிர விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கையர் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading