Local

ஐ.நா.பொதுசபையில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்கா பயணமாகிறார்!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா பயணமாகவுள்ளார்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது பொருளாதாரம், கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏனைய நாடுகளின் அரச தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, குறைந்த எண்ணிக்கையிலான நாட்டு பிரதிநிதிகளுடன் இந்த விஜயத்தை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பாரியார் அயோமா ராஜபக்ச தனது பிரத்தியேக செலவில் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் இதுவரை காலம் பங்கேற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை  குறைந்த எண்ணிக்கையிலானோர் பங்கேற்கின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading