Uncategorized

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கு அமைச்சரவை அனுமதி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1, 40/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் செயற்பாட்டிலிருந்து விலகுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போதே இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்படி தகவலை வெளியிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவால் மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த யோசனை இன்று நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading