World

ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் முகக் கவசம் அணியத் தேவையில்லை!

பெல்ஜியத்தில்  பெரும்பாலானோருக்கு கொரோனாத் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதால், எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல்  முகக் கவசம் அணியத் தேவையில்லை” என அந்நாட்டுப் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரோ (Alexander De Croo)அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” இதுவரை, ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாத் தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளன. ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல், கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணியத்தேவையில்லை.

எனினும், சுகாதார மையங்கள், விமான நிலையங்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும். மேலும், கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளை பொது மக்கள் பின்பற்ற வேண்டும்”எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading