Local

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நாட்டை முழுமையாகத் திறக்கலாம்!

எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளின் கீழ்  நாட்டை முழுமையாகத் திறக்க முடியுமென ராகமை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரி யர் அர்ஜுன டி சில்வா தெரிவித் துள்ளார்.

நாட்டை நீண்ட நாட்களுக்கு முடக்கியமைக்கான பெறுபேறுகள் தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் நாட்டைத் திறந்தாலும் அரச மற்றும் தனியார் நிறுவனங் களில் 25 வீதமான ஊழியர்களை பணிக்கு அழைக்குமாறும், பொதுப் போக்குவரத்துகளில் 50 சதவீத பயணிகளை உள்வாங்கு மாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

திருமண நிகழ்வுகள், களியாட் டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு தொடர்ந்து தடை விதிக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், நாட்டு மக்களில் 70 தொடக்கம் 80 வீதமானவர் களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே நாடு திறக்கப்பட வேண்டு மெனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கொவிட் மர ணங்கள் மற்றும் நோயாளர் களின் எண்ணிக்கை குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்ததெனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading