Cinema

ஒட்டு மொத்த படங்களின் வசூலையும் முறியடித்த ஜவான்

ஜவான் திரைப்படம் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7 திகதி திரையரங்குகளில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் வசூலில் வேட்டையாடி வருகின்றது.

பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக கலக்கி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலை குவித்து பொலிவுட்டின் ஒட்டு மொத்த படங்களின் வசூலை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading