Local

ஒன்டாரியோவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தமிழர்!

ஒன்டாரியோ, Pickering நகரில் வாகனம் ஒன்று ஏரியில் நுழைந்ததில் தமிழர் ஒருவர் உயிரிழந்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததென Ontario பொலிஸார் டுவிட்டரில் பதிவிட்டு தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த 43 வயதான நிமல்ராஜ் குகதாசன் என குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கஜன் என அழைக்கப்பட்ட இவர் இலங்கையில் கோண்டாவிலை பிறப்பிடமாக்கவும், கனடாவில் Brampton நகரை வதிவிடமாகவும் கொண்டவராவார்.

குறித்த நபர் தவறான விளையாட்டு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் வீபரீத விளையாட்டில் ஈடுபட்ட போது வாகனம் வீதியை விட்டு விலகி தண்ணீரில் தலைகீழாக விழுந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்னர்.

சம்பவத்தின் போது புகைப்பட கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்து அதனை பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.

புகைப்பத்திற்கமைய வாகனம் தலை கீழாக காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading