Local

ஒன்றரை வயது பெண் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை

நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளது.

பெரியமுல்ல பகுதியில் உள்ள பாலமொன்றிற்கு அருகில் கடந்த 13ஆம் திகதி குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

குழந்தை சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நேற்று நீதவான் விசாரணைகள் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.

குழந்தையின் சடலம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையும் பிரேதப் பரிசோதனையும் இன்று முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, சம்பவம் தொடர்பில் குழந்தையின் சிறிய தந்தையான 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் நாளைய தினம் நீதவான் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading