Gossip

ஒரு ஆணுக்கு எப்படிப்பட்ட மனைவி அமைந்தால் கள்ளக் காதல் வைக்க மாட்டார்கள்?

ஒழுக்கமுள்ள ஆண் உலக அழகியே வந்தாலும் சபலப்பட மாட்டான். அதுவே, ஒழுக்கமற்றவனாக இருந்தால், உலக அழகியே மனைவியாக இருந்தாலும் மற்றொரு பெண்ணை தேடுவான். இதில் ஒரு சிலர் மட்டும் விதிக்கு. வீட்டில் ராஜபோக விருந்து கிடைத்தாலும் ரோட்டு கடையில் கொத்து பரோட்டாவை வாங்கி சாப்பிட்டால் தான் ஒரு திருப்தி ஏற்படும். அந்த மாதிரி பார்க்கும் இடம் எல்லாம் ஒரு செட்டப் தேடுவாங்க.

சிலுக்கே பொண்டாட்டியா இருந்தா கூட, ஒரு சிலர்  வப்பாட்டி வச்சுதான் இருப்பானுங்க. முதலில் தாம்பத்தியத்தில் இருவரும் மனம் விட்டு பேசி புரிந்து மகிழ வேண்டும். பாலுறவில் திருப்தி இல்லாதவர்களே வெளியில் தேடுகிறார்கள். அதையும் தாண்டி பல தொடர்பு தேடும் துணை என்றால் பேசாமல் பிரிந்து விடுவதே நல்லது. இருவருக்கும் புரிதல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கள்ளக்காதல் ஏற்பட வாய்ப்பு இல்லை.

சில கணவன்மார்கள் மனைவிக்கு எந்த குறையும் இல்லை என்றாலும் வேறு பெண்ணை தேடுகிறார்கள். சிலர் குறை இருந்தால் வேறு பெண்ணை தேடுகிறார்கள். அதனால் உங்களிடம் உள்ள குறைகளை, உங்கள் மனசாட்சியை கேட்டு சொல்லுங்கள். உங்கள் கேள்விக்கு விடை கொடுக்கப்படும். தன் பேச்சைக் கேட்டு நல்லது கெட்டது அறிந்து அறிவுரைகள் வழங்கினால் ஆண்களுக்கு மனைவியை பிடிக்கும். தான் விரும்பும் தாம்பத்ய சுகம் ஆசைப்படும் பொழுதெல்லாம் மனைவி அளித்தால் ஆண்கள் கள்ளக்காதலில் ஈடுபட மாட்டார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading