Local

ஒரு இறாத்தல் பாணின் விலை 1500 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம்!

இலங்கையில் ஒரு இறாத்தல் பாண் 1500 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதென தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.

பணவீக்கம் இவ்வாறு தொடர்ந்தும் அதிகரிக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதத்துக்குள் சராசரியாக இந்த விலை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று 100 ரூபாவில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்வது டிசம்பர் மாதத்தில் 1790 ஆக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

உயர் பணவீக்கம் மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்றும், அதனை வளர்ச்சியடையாமல் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நெத் எப்.எம் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading