World

ஒரு இலட்சம் நீர்வாழ் உயிரினங்களைக் கொல்லுமாறு உத்தரவு

ஸ்பெய்னின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பண்ணையொன்றில் உள்ள சுமார் ஒரு இலட்சம் மின்க் (Mink) எனப்படும் அரை நீர்வாழ் உயிரினங்களைக் கொல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மென் மயிர்த் தோல் கொண்ட சிறிய விலங்கினமான அவற்றின் பெரும்பாலானவைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில் பண்ணை ஒன்றில் வேலை செய்யும் ஊழியர் ஒருவரின் மனைவிக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து, ஸ்பெய்னின் Aragon மாகாணத்தில் தொற்று ஏற்பட்டிருப்பது அடையாளங்காணப்பட்டது.

இதன் பின்னர் தொற்றுக்குள்ளான பெண்ணின் கணவருக்கும் ஆறு பண்ணை ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, அங்கு வளர்க்கப்படும் மின்க் உயிரினம் அனைத்தும் தனிமைப்படுத்தி தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த 13 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், குறித்த பண்ணையிலிருந்த மின்க்களில் 87 வீதமானவைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பண்ணையிலுள்ள 92,700 விலங்குகளையும் கொல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவற்றின் விலைமதிப்பில்லாத உரோமத்திற்காக இவை வளர்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading