Local

ஒரு நாள் சாப்பாட்டை இரண்டு நேரமாக குறைத்து கொள்ள ஜகத் குமார வேண்டுகோள்!

ஒரு நாளைக்கு மூன்றுவேளை உண்பவர்கள் இரண்டு நேரமாக அதனை குறைத்து தியாகம் செய்யவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை மக்கள் சில தியாகங்களை செய்யவேண்டும் என்றும், மூன்றுவேளையும் உணவுண்பதை தவிர்த்து இரண்டுவேளை சாப்பிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுந்தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் அனேகமான மக்கள் அவலநிலையில் உள்ளனர் என நான் நினைக்கின்றேன்,எவரும் 2000 ரூபாயுடன் வாழமுடியாது என்பதால் நாங்கள் அது குறித்து கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

2000 ரூபாய்க்கு பதில்; 20,000 ரூபாயை அரசாங்கத்தினால் வழங்க முடியும் என்றால் வழங்கியிருப்போம் என கூறிய அவர், நாங்கள் அனைவரும் தியாகங்களை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்களும் எங்கள் சம்பளத்தினை கொவிட் நிதியத்திற்கு வழங்கியிருந்தோம், அனைவரும் இதுவரை ஒருநாளைக்கு மூன்றுவேளை சாப்பிடுபவர்களாகயிருந்தால் அவர்கள் இன்னும் சில நாட்களிற்கு இரண்டுவேளைமாத்திரம் உணவுண்ணவேண்டும் எனவும் ஜகத் குமார கூறினார்.

மேலும் நாங்கள் செய்யும் தியாகங்களே எங்கள் பிள்ளைகளின் எதிர்காலமாக அமையும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கூறியுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading