Entertainment

ஒரே நாளில் இரு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இரட்டை சகோதரிகள்!

அமெரிக்காவில் ஒரே நாளில் இரட்டைச் சகோதரிகள் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த நிகழ்வு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக இரட்டையர்களாகப் பிறப்பவர்கள் செயல்களிலும், பழக்கவழக்கங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பார்கள். காலப்போக்கில் இவர்களின் வாழ்க்கை முறை மாற்றத்தால் இரட்டையர்களுக்கான பழக்கவழக்கமும் மாறும். குறிப்பாகத் திருமணம், குழந்தைப்பேறு, மரணம் போன்ற பல நிகழ்வுகள் காலப்போக்கில் மாறிவிடும்.

ஆனால், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 30 வயதான ஒரே மாதிரியான இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

பத்து நாட்கள் இடைவெளியுடன் பிறந்தாலும் உருவ ஒற்றுமையில் இரட்டையர்களாக வாழ்ந்து வரும் ஜில் ஜஸ்டினியானி மற்றும் எரின் செப்லக் தான் குழந்தை பெற்றெடுத்து உள்ளனர்.

ஒரே மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இருவரும் 5 மணி நேர இடைவெளியில் ஓரே நாளில் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள ஜில், இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும் இரட்டையர்கள் பொதுவாக ஒரே காலகட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பார்கள். ஆனால் ஒரே நாளில் சில மணி நேர இடைவெளியில் குழந்தை பிறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என ஜில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading