World

ஒரே நாளில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

ஹிஸ்புல்லா அமைப்பினருடனான மோதலில் தமது தரப்பில் ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல்(israel) இராணுவம் தெரிவித்துள்ளது.அத்துடன் இந்த தாக்குதலில் மேலும் ஒரு சிப்பாய் காயமடைந்துள்ளார்.

தெற்கு லெபனானில்(lebanon) இடம்பெற்ற மோதலின்போதே இந்த இழப்புகள் பதிவாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் பிற்பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக தொடங்கிய படை நடவடிக்கையில் இஸ்ரேல் படைக்கு ஒரே நாளில் ஏற்பட்ட இரண்டாவது மிகப்பெரிய இழப்பு இதுவென தெரிவிக்கப்படுகிறது.

தொடரும் ஹிஸ்புல்லா அதிரடி : ஒரே நாளில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு | Israeli Soldiers Killed In Fighting With Hezbollah

அவர்கள் அனைவரும் கோலானி படைப்பிரிவின் 51 வது பட்டாலியனில் பணியாற்றியதாக இஸ்ரேல் படைத்துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி ஒரே நாளில் 08 படையினர் கொல்லப்பட்டதே இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading