Local

ஒரே நாளில் 5 இலட்சம் பேருக்கு கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 9,54,54,765 கடந்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,21,228 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவற்றில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,853 பேருக்கும், பிரேசிலில் 31,394 பேருக்கும், இங்கிலாந்தில் 38, 598 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் கொரோனாவால் இதுவரை 20,35,000 அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 2,52,66,457 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1,13,217 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதோடு வைரஸ் பாதிப்பில் இருந்து 6,80,000 அதிகமானோர் குணமடைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,21,228 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading