World

ஒரே பல்கலைக்கழகத்தில் மகனுடன் சேர்ந்து பட்டம் பெற்ற தாய்!

சிங்கப்பூரில் மகனைப் பெருமைப்படுத்திய தாயார் தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

தாயாரும் மகனுடன் சேர்ந்து பட்டம் பெற்றிருந்தார் என தெரியவந்துள்ளது.

அவர்களைப் பாராட்டி பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி ஆகியவற்றுக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா தமது  Facebook பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். 

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பட்டமளிப்பு விழா சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 

தாயார் Adlin Sandhora மலாய் மொழியில் இளநிலைப் பட்டம் பெற்றார்.  

மகன்  Raiyan Diniy ஆங்கில மொழியில் பட்டக்கல்வி பெற்றார். தாயாருடன் சேர்ந்து படித்ததால் பிணைப்பு அதிகரித்ததாக ராயன் கூறினார். 

சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயில்வோரில்  பெரும்பாலானோர் குடும்பம், வேலை ஆகியவற்றுக்கு இடையே பட்டப் படிப்பை மேற்கொள்பவர்கள். இது அவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது என்று திருவாட்டி இந்திராணி கூறினார். 

பட்டமளிப்பு விழா மாணவர்களது மன உறுதி, விடாமுயற்சி ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக அவர் பாராட்டியிருந்தார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading