World

ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்ய அனுமதி!

சுவிட்ஸர்லாந்தில்  ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சுவிட்ஸர்லாந்து பாராளுமன்றத்தில் ஒரினச்சேர்கையாளர்களுக்கு சார்பான தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டிருந்து.

 குறித்த தீர்மானத்தில் ஓரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும், அவர்கள் விரும்பினால் குழந்தையொன்றைத் தத்தெடுத்து வளர்க்கலாம் என்றும், குறிப்பாகத் திருமணமான லெஸ்பியன் ஜோடிகளும்  விந்து தானம் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம்  எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இது குறித்து நடைபெற்ற வாக்கெடுப்பில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பெரும்பான்மையானோர்(64.1சதவீதமானோர்) குறித்த தீர்மானத்திற்குச் சார்பாக வாக்களித்தமையால்  இதனை சட்டமாக்க  சுவிட்சர்லாந்து பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அந்தவகையில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களின்  திருமணத்தை அங்கரித்த 30 ஆவது நாடாக சுவிட்ஸர்லாந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading