World

ஒலியை விட 9 மடங்கு வேகமாகச் செல்லும் ஏவுகணை!

மேற்கத்திய நாடுகள் உடனான மோதலை எதிர்கொள்ள ரஷ்யா கடந்த சில வருடங்களாக ஹைபர்சோனிக் ஆயுதங்களை தயாரிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

அந்த வகையில் ஒலியை விட 9 மடங்கு வேகமாகச் சென்று இலக்கைத் துல்லியமாக தாக்கும் சிர்கான் எனப்படும் ஹைபர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ரஷ்ய ஆர்டிக்கில்லில் உள்ள வெண் கடலில் நிலைநிறுத்தப்பட்ட அட்மிரல் கோர்ஸ் கோ கப்பலில் இருந்து ஏவப்பட்ட சிர்கான் ஏவுகணை 350 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாக தெரிவித்துள்ளது.

சிர்கான் ஏவுகணையானது ஆயிரம் கிலோ மீட்டர் வரையிலான இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும்.

இதற்கு முன்னர் கடந்த அக்டோபர் மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பிறந்தநாளில் சிர்கான் ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது.

இதனிடையே, ரஷ்யாவில் ராணுவத்தைப் பலப்படுத்த ஹைபர்சோனிக் ஏவுகணை முக்கிய பங்காற்றும் என அதிபர் விளாடிமிர் புதின் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading