Local

ஒவ்வொரு மணித்தியாலயத்திலும் 32 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ஒவ்வொரு மணித்தியாலயத்திலும் 32 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக தெரிவிக்கப்பட்டுளு்ளது.

மத்திய வங்கியின் வெளிவிவகாரப் பிரிவின் தரவுகள் இதனை  தெரிவித்துள்ளன.

இது தென்னிந்தியா அல்லது ஆஸ்திரேலியாவிற்கு கடல் வழியாக சட்டவிரோதமாக தப்பிச் செல்லும் எண்ணிக்கையை விட அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை, அவுஸ்திரேலிய எல்லைப் படை சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற 46 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது,

இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 183 ஆகும்.

உடல் ரீதியான துஷ்பிரயோகம், சுரண்டல், நீண்ட வேலை நேரம், மனித உரிமை மீறல்கள், ஊதியம் அல்லது குறைவான ஊதியம், இறப்பு மற்றும் ஊனம் போன்ற ஆபத்துகள் இருந்தபோதிலும், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களும் ஆண்களும் இந்த ஆண்டு நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading