Local

ஓமானில் சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்றும் நடவடிக்கை இடைநிறுத்தம்

சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்றும் நடைமுறையை நிறுத்துவதற்கு ஓமான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, அனைத்து நாட்டவர்களும் சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் பிரவேசித்து குறித்த விசாவை தொழில் விசாவாக மாற்றும் நடவடிக்கையினை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 31 ஆம் திகதி முதல் குறித்த நடவடிக்கை நிறுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, சுற்றுலா விசாவின் ஊடாக ஓமானுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு நாட்டவரும் தமது வீசாவை தொழில் விசாவாக மாற்றுவதற்கான சாத்தியமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் நபர் ஒருவருக்கு அந்த நாட்டு தூதரகத்தின் ஆட்சேபனை கடிதத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் தொழில் விசா வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஓமான் நாட்டுக்குள் பிரவேசிக்கும் நபர் ஒருவருக்கு தொழில் கிடைக்குமாயின் குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேறி தொழில் விசாவை பெற்று மீண்டும் நாட்டுக்குள் பிரவேசிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading