Local

கடதாசி தட்டுப்பாட்டால் மின் கட்டண பட்டியலின் அளவில் மாற்றம்!

இலங்கை மின்சார சபை (CEB) தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் மின் கட்டண பட்டியலுக்கு பதிலாக, சிறிய மின் கட்டண பட்டியல் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சில பகுதிகளில் இவ்வாறு மின்சார சபையினால் சிறியளவான கட்டணம் மாத்திரம் பொறிக்கப்பட்ட மின் கட்டண பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

பழைய கட்டண பட்டியல் புத்தகங்கள் காலாவதியாகிவிட்டதாகவும், புதிய கட்டண பட்டியலிடும் புத்தகங்கள் இன்னும் அச்சிட்டு வரவில்லை என்றும் மின்மானி வாசிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் கடதாசி இறக்குமதிக்கான அந்நியச் செலாவணி இல்லாததால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading