Local

கடத்தப்பட்ட இலங்கை மீனவர்கள் மீட்பு!

ஆயுததாரிகள் குழுவின் பிடியிலிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட மீனவர்கள் Seychelles நாட்டின் தலைநகருக்கு அழைத்துச்செல்லப்படுவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினர் தலையீட்டுடன் Seychelles பாதுகாப்பு தரப்பினர் மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

ஆயுததாரிகள் குழுவின் மூவர் Seychelles பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

‘Lorenzo Putha 4’ என்ற இந்த மீன்பிடிப் படகு கடந்த 12 ஆம் திகதி டிக்கோவிட்ட பகுதியில் இருந்து தனது முதலாவது கடல் பயணத்தை மேற்கொண்டிருந்தது.

இதில் சிலாபம் மாரவில பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களே கடற்றொழிலுக்கு சென்றிருந்தனர்.

அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading