Local

கடந்த 45 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலையாளி தூக்கிலிடப்பட்டார்

நேற்றிரவு தூக்கிலிடப்பட்ட கொலையாளி..!

பங்களாதேஷ் நாட்டின் ஸ்தாபக தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானைக் கொன்ற கொலையாளியை பங்களாதேஷ் அதிகாரிகள் தூக்கிலிட்டனர். கடந்த 45 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மஜீத் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் இராணுவத் அதிகாரியான அப்துல் மஜீத் தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள கெரானிகஞ்சில் உள்ள மத்திய சிறையில் சனிக்கிழமை நள்ளிரவுக்கு ஒரு நிமிடம் கழித்து தூக்கிலிடப்பட்டார் என்று சிறைச்சாலை படையணி பொறுப்பாளர் ஜெனரல் ஏ.கே.எம் முஸ்தபா கமல் பாஷா தெரிவித்தார்.

கடந்த செவ்வாயன்று டாக்காவில் மஜீத் கைது செய்யப்பட்டார், உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான், இந்த கைது இந்த ஆண்டு பங்களாதேஷுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று கூறியிருந்தார்.

இந்த படுகொலையில் தனது தொடர்பு இருப்பதாக மஜீத் பகிரங்கமாக அறிவித்திருந்தார், இவர் பல ஆண்டுகளாக இந்தியாவில் தலைமறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கருணை கோரி மஜீத் தாக்கல் செய்த மனுவை ஜனாதிபதி எம் அப்துல் ஹமீத் நிராகரித்ததை அடுத்து இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவரது மனைவி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் சனிக்கிழமை கடைசியாக அவரை சந்தித்தனர்.

2009 ஆம் ஆண்டில் அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பல குற்றவாளிகளில் இந்த மஜீதும் ஒருவராவார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading