Gossip

கடனுக்கு பதிலாக மனைவியை கற்பழிக்க கொடுத்த கணவன்!

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடிக்கு அடிமையானவர். கடந்த வருட ஊரடங்கால் சரியான வருமானம் இல்லாததால் அவரது நண்பர்களிடம் கடன் வாங்கியிருந்தார். தற்பொழுது அந்த கடனை அவரால் திருப்பித் தர முடியவில்லை. இதனால் கடனுக்கு பதிலாக உனது மனைவி வேண்டும் என நண்பர்கள் சுந்தரமூர்த்தி மற்றும் மணிகண்டன் ஆகியோர் கேட்டுள்ளனர். 
சற்றும் மனம் வருந்தாத கண்ணன் கடந்த 2020 டிசம்பர் மாதம் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து அவளை பாலியல் பலாத்காரம் செய்ய சுந்தரமூர்த்தியை அனுமதித்துள்ளார். அடுத்த சில நாட்கள் கழித்து மனைவி தூங்கி கொண்டிருக்கும் போது மணிகண்டனை அழைத்து வந்து மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார். விழித்துக்கொண்ட பெண்மணி விறகு கட்டையால் தனது கணவரை தாக்கிவிட்டு மகனை தூக்கிக்கொண்டு தாய் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். 
இத்தனை செய்தும் அடங்காத கொடூர கணவன் அங்கும் வந்து தனது நண்பர்களுக்கு ஒத்துழைக்குமாறு வற்புறுத்தியுள்ளான். இதனால் அவன்மீது  பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார புகாரை அளித்துள்ளார். புகாரை விசாரித்த காவல்துறையினர் 3 கொடூர மிருகங்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading