Local

4 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது!

இரக்குவானை போத்துபிட்டியில் உள்ள பாடசாலையின் அதிபர் 04 ஆண் மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்ட அதிபர் 43 வயதான திருமணமாகாதவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள்  11 முதல் 13 வயதுக்குட்பட்ட அதே பாடசாலையை சேர்ந்த ஆண் மாணவர்களாவர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களின் நடத்தைகளில் மாற்றத்தைக் கண்டறிந்த பின்னர் இது தொடர்பாக பொலிசாருக்கு தெரிவித்தனர்.

பின்னர் இடம்பெற்ற விசாரணையின் போது மாணவர்கள் அதிபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்தது. அதன்படி பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதிபரை இரக்குவானை பொலிசார் கைது செய்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading