World

கடற்கரையில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அற்புத காட்சி!

அமெரிக்காவில் கடலில் இருந்து மேகம் நீரை உறிஞ்சியதை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதன்படி ,புளோரிடாவில் உள்ள லேக் ஒர்த் என்ற கடல் பகுதியில் நேற்று மாலை மேகக்கூட்டம் திரண்டு வந்து அடுத்த சில நொடிகளில் சுழற்காற்று போல மேகம் திரண்டு கடல் நீரை மேல் நோக்கி இழுத்தது. இந்த அற்புத நிகழ்வை கடற்கரையில் இருந்தவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.

மேலும் சிலர் அதனை தங்கள் செல்போனில் படம் பிடித்துக் கொண்டனர். கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், இதுபோன்ற நிகழ்வு ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading