World

கடலின் மேற்பரப்பில் வரலாறு காணாத வெப்பம் பதிவானது!

கடலின் மேற்பரப்பில் பதிவான வெப்பம் இதுவரை இல்லாத அளவில் 20.96 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் வழக்கமாக இந்தக் காலக்கட்டத்தின் சராசரி அளவைவிட அது அதிகமாகியுள்ளது.

இதற்கு புதிய உச்சங்களைத் தொட்ட வெப்பத்திற்கு எல் நினோ (El Niño) வானிலை காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே வானிலையால் அனைத்துலக வெப்பநிலையும் உயர்ந்திருக்கிறது. எல் நினோ வானிலை தண்ணீரின் வெப்பத்தைக் கூட்டுகிறது. அதனால் நீரில் கரையும் கரியமில வாயுவின் அளவு குறையும்.

சுற்றுச்சூழலிலேயே வாயு தங்கிவிடும். இதனால் பனியோடைகள் கரையும் வேகம் அதிகரிக்கலாம், கடல் மட்டமும் உயரலாம்.

சூடான கடலும் அனல்காற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பெரிதும் பாதிக்கலாம். குளிர்ச்சியான தண்ணீரைத் தேடி உயிரினங்கள் சென்றால் உணவு விநியோகம் தடைபட்டுபோகலாம்.

சூடான கடல் நீரின் தாக்கம் அமெரிக்காவின் புளோரிடாவிலும் (Florida) தென்படுகிறது. அங்குள்ள பவளப்பாறைகள் வெளுத்துப்போகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading