Local

கடையாமோட்டையில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொடர்பான கூட்டம்!

புத்தளம் மாவட்ட செயலாளரின் தலைமையில் நடைபெறும் பெருநாள் விளையாட்டு விழா தொடர்பான மற்றுமொரு கூட்டம் 2023.04.08ஆம் திகதி கடையாமோட்டை பிரதேச சபை உப காரியாலயத்தில் பராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட செயலாளர் H.M.S.P. ஹேரத், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் A. H. M. ரியாஸ், கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக, மதுரன்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேச சபை உயர் அதிகாரிகள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், சிவில் சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் ஜவ்சி ஜமால்தீன் என பலர் இக்கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.

கடையாமோட்டை பாடசாலை பொது விளையாட்டு மைதானத்தில் பெருநாள் விளையாட்டு நிகழ்ச்சிகளை எதிர் வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவது தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

நுரைசோலை மற்றும் கடையாமோட்டை பிரதேசங்களில் நடைபெறும் பெருநாள் விளையாட்டு விழாவுக்காகவும் கல்பிட்டி நகரை மின் விளக்குகளால் அலங்கரிப்பதற்காகவும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் ரூபா. 6 லட்சம் வழங்குவதாக உறுதியளித்தார். (படமும் தகவலும் கற்பிட்டி செய்தியாளர் எம்.எச்.எம் சியாஜ்)

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading