Local

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்படும் E-gate எனப்படும் தானியங்கி பயணிகள் அனுமதி வாயில்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ள 4 தானியங்கி பயணிகள் அனுமதி வாயில்களுக்கு மேலதிகமாக, மேலும் 8 வாயில்கள் உட்பட மொத்தம் 12 தானியங்கிப் பயணிகள் அனுமதி வாயில்கள் அமைக்கப்படவுள்ளது.

அதற்கு, முறையான கொள்முதல் முறையைப் பின்பற்றி கொள்வனவு செய்து நிறுவும் பணிகளை தொடங்குவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பயணிகள் அனுமதி

கட்டுநாயக்க விமான நிலையத்திற்காக 4 தானியங்கிப் பயணிகள் அனுமதி வாயில்களைக் கொள்வனவு செய்து நிறுவுவதற்கு 2025ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 19ஆம் திகதி அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம் | Changes In Katunayake Airport

இதுவரை இலங்கையர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த தானியங்கி பயணிகள் அனுமதி வாயில் வசதியை, நாட்டுக்கு வருகை தரும் மற்றும் நாட்டிலிருந்து புறப்படும் வெளிநாட்டினரும் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

2027 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள E-Passport வழங்கும் முறைக்கமைய, இந்த அனுமதி விரிவுப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறையின் விரைவான வளர்ச்சியுடன் வான்வழிப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

இதனை கருத்திற்கொண்டு, மொத்த தானியங்கிப் பயணிகள் அனுமதி வாயில்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிப்பதன் அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading