‘Super Intelligence’ என பெயர் மாற்றம் செய்யவுள்ள ட்ரம்ப்…!!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செயற்கை நுண்ணறிவை (AI) இனி “Super Intelligence” என அழைக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசின் புதிய AI அடிப்படையிலான இணைய தளமான America.gov அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், AI தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதற்கு முன்பு இந்த கருத்தைத் தெரிவித்தார்.
America.gov தளமானது, அரசு இணையதளங்களைப் பயன்படுத்தும் பொதுமக்களின் அனுபவத்தை எளிமைப்படுத்தும் நோக்கில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
America.gov தளத்தை “ultimate product” என வர்ணித்த ட்ரம்ப், மத்திய அரசு இனி உங்கள் வழியில் நிற்காது என்று தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தனது ஜனாதிபதி பதவியின் முதல் நாளிலேயே தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்கா AI துறையில் மற்ற நாடுகளைவிட முன்னிலையில் இருக்கும் என்று கூறிய ட்ரம்ப், சில நாடுகளில் இதற்கு ஒத்த திறன்கள் இருந்தாலும் அவை “மிகக் குறைந்த அளவில்” இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment.